முன்னணி நடிகர்களுக்கு நண்பராக வந்து காமெடி செய்து வரும் நடிகர் சதீஷ், தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பார்ப்பவர்களை முதலில் ஆச்சர்யப்படுத்தினாலும், பின் குழப்பி விட்டுள்ளது.

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். காமெடி வேடத்தை தாண்டி, குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அதாவது, ஒரு நாட்காலியின், மேல் நின்று பின் கால்களை மடக்கி  அந்தரத்தில் மிதந்து நிற்பது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ கொஞ்சம் யோசிக்கும் படியும் முடிவில் சிரிக்கும் படியும் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.