தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் காளி வெங்கட். இவர் காமெடி வேடம் மட்டும் இன்று பல படங்களில் குண சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.  இவர் நடித்த 'தெகிடி', 'ராஜா மந்திரி' , 'மெர்சல்', ராட்ச்சசன் ஆகிய படங்களில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தது.

35 வயதை கடந்தும் தனக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என பல மீடியாக்களில் புலம்பி வந்த இவருக்கு,  கடந்த வருடன் ஜானகி என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இவருடைய மனைவி கர்பமாக இருந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் இவருடைய மனைவிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது இந்த மகிழ்ச்சியை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். 

மேலும் காளிவெங்கட்டுக்கு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.