வடிவேலு, விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயமணியை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பார்ப்பதற்கு நடிகர் செந்தில் போலவே, உருவ அமைப்புடன் வலம் வரும் ஜெயமணி, சுமார் 75க்கும் மேற்பட்ட படங்களில், காமெடி வேடத்தில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் வடிவேலு மற்றும் விவேக்குடன் இணைந்து நடித்துள்ளார். 

இந்நிலையில் இவர் நடைபயிற்சி மேற்கொண்ட நீதிபதியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், பிரச்சனை முற்றியதால்... இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Sunaina: அச்சச்சோ நடிகை சுனைனாவுக்கு என்னாச்சு? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. வைரலாகும் புகைப்படம்!

கிண்டி காவல் துறையினரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது, "நீதிபதி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரை வம்பிழுத்ததாகவும், வாய் வார்த்தை முற்றியதால் நீதிபதி என்றும் பாராமல் அவரை இழுத்து தாக்க முயன்றதாக புகார் கொடுக்கப்பட்டது".

Tamannaah Bhatia: டக்குனு பார்த்ததும் பக்குனு ஆகிடுச்சு! ஸ்கின் கலர் உடையில் ரசிகர்களை ஜர்க் ஆக்கிய தமன்னா!

இந்த புகாரின் அடிப்படையில் கிண்டி காவல்துறையினர் நடிகர் ஜெயமணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஜெயமணியின் நெருங்கிய நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.