தமிழ் சினிமாவில், குணச்சித்திர நடிகர், காமெடியன், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகர் சின்னி ஜெயந்த். திரையுலகு சம்பந்தமான டிப்ளமா படிப்பை, படித்து முடித்து விட்டு நடிக்க வாய்ப்பு தேடிய இவர், பிரபல இயக்குனர் மஹேந்திரன் இயங்கிய 'கை கொடுக்கும் கை'  படத்தின் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கினார்.

மேலும் செய்திகள்: முன்னணி ஹீரோயின்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் ஷாருக்கான் மகள்..! டவல் போன்ற உடையில் தெறிக்கவிடும் கவர்ச்சி!
 

இதை தொடர்ந்து, பொங்கலோ பொங்கல், கிழக்கு வாசல், காதலர் தினம், கண்ணெதிரே தோன்றினால் என 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் 'உனக்காக மட்டும்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார்.

பொதுவாக நடிகர்களின் மகன், மற்றும் மகள்கள் திரைத்துறையை தேர்வு செய்வது தான் வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் அதனை, மாற்றியுள்ளார் நடிகர் சின்னி ஜெயந்த் மகன், ஸ்ருதன் ஜெய்  ஜெயந்த், கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

மேலும் செய்திகள்: ஆண்ட்டி வயதிலும் உச்ச கவர்ச்சியில் அதகளம் பண்ணும் பிக்பாஸ் ரேஷ்மா..! கொஞ்சம் ஓவராகவே ரசிக்கும் இளசுகள்!
 

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில், அகில இந்திய அளவில் நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த், 75 இடத்தை பிடித்து தேர்ச்சியடைந்துள்ளார். இந்த தேர்வில் பிரதீப் சிங் என்பவர் முதலிடத்தை பிடித்து வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரபல செய்து தொலைக்காட்சிக்கு ஸ்ருதன் ஜெய் கொடுத்த பேட்டியில், தான் என்னவாக விரும்புகிறேன் என்பதை தேர்வு செய்து படிக்க, பெற்றோர் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும், தமிழகத்தின் வலிமைகளான கல்வி, சுற்று சூழல், தொழில்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார். இவருக்கு பிரபலங்கள் முதல் பலர் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: பிரமிக்க வைக்கும் லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருளின் புதிய வீடு..! சும்மா கண்ணாடி போல் பளபளக்கும் பங்களா!
 

நேற்று வெளியான சிவில் சர்விஸ் தேர்வு முடிவில், மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.