உங்க அளப்பறைக்கு ஒரு அளவே இல்லையா? டிகிரி வாங்கும்போது.. புஷ்பாவா மாறி ஹூக் ஸ்டெப் போட்ட மாணவர்! வீடியோ
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படத்தின் தாக்கம் எந்த அளவுக்கு, மாணவர்கள் மனதில் பதிந்துள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக, இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா தி ரூல்' என்கிற பெயரில் உருவாகி வருகிறது. புஷ்பா படத்தை ,இயக்குனர் சுகுமார் பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாகத்திற்கு அல்லு அர்ஜுன் தேசிய விருதை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் சுகுமார் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தை ஆகஸ்ட் 15-ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட உள்ளனர்... இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பையரிங்’ பாடல் மே 1-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தேவி ஸ்ரீ பிரஷாந்த் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் டிஎஸ்பி-யின் இசை மற்றும் பின்னணி இசை அதிகம் பேசப்படும் என்பதை இந்த பாடலே உணர்த்தியது.
இந்த படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க... முக்கிய வேடத்தில் சுனில், பாகத் பாசில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
படம் வெளியாவதற்கு முன்பே, புஷ்பா படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அடிக்கடி புஷ்பா 2 படத்தின் ஹூக் ஸ்டெப்புக்கு ரீலீஸ் செய்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது, கல்லூரி கான்வேகேஷன் நிகழ்ச்சியில் புஷ்பா பாடலுக்கு டான்ஸ் ஆடி வியக்க வைத்துள்ளார் மாணவர் ஒருவர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.