விக்ரமின் (Vikram) கோப்ரா (cobra) பட வில்லனுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது சியான் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் (Irfan Pathan). இப்படத்தில் அவர் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். 

இர்பான் பதான் கடந்த 2016-ம் ஆண்டு சஃபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு கடந்த 2016-ம் ஆண்டே ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இம்ரான் கான் என பெயரிட்டிருந்தனர்.

இந்நிலையில், இர்பான் கான் - சஃபா தம்பதிக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ள இர்பான் பதான், 2வது மகனுக்கு சுலைமான் கான் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறியுள்ள இர்பான் பதான், குழந்தையை கையில் தூக்கி வைத்தவாறு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.