cinema ticket rate will be increased

கடந்த சில மாதங்களாக தமிழக திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்கு கட்டணத்தை உயர்த்தக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். 

இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 
சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்தவகையில் ஏ/சி அல்லாத திரையரங்குகளுக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் கட்டணமும், குறைந்த பட்சமாக 30 கட்டணமுமாக ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. 

அடுத்ததாக, சென்னை இல்லாத மற்ற நகரங்களில் இயங்கும் ஏ/சி திரையரங்கங்களுக்கு அதிகபட்சமாக 140 ரூபாயும், குறைந்த பட்சமாக 50 ரூபாயும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் இயங்கும் மல்டிப்ளக்ஸ் திரையரங்கங்களில் குறைந்த பட்ச கட்டணமாக 50 ரூபாயும் அதிக பட்சமாக 160 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.