அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்லுங்.. அப்புறம் நடிக்கட்டும் - இதுதான் SJ சூர்யாவின் உண்மை முகமா? விளாசிய விமர்சகர்!
பொம்மை திரைப்படம் உள்பட இரு திரைப்படங்களில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நாயகியாக நடித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என்று பல தலைப்புகளுக்கு சொந்தக்காரர் தான் எஸ்.ஜே சூர்யா. அவருடைய திரை பயணத்தை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சொந்த ஊரிலிருந்து சினிமா கனவோடு சென்னைக்கு வந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் வறுமையின் உச்சத்தில் வாடி பசியை போக்கிக்கொள்ள பல ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்தார்.
அதன் பிறகு பல முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி தொழில் கற்றுக் கொண்டு தல அஜித் அவர்கள் அளித்த வாய்ப்பினால் இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் சூர்யா. அதன் பிறகு பல முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி தொழில் கற்றுக் கொண்டு தல அஜித் அவர்கள் அளித்த வாய்ப்பினால் இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் சூர்யா. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தும் ஒரு கெட்டிக்காரர். குறிப்பாக கடந்த சில வருடங்களாக அவருடைய நடிப்பும் வளர்ச்சியும் பலரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இறைவி, ஸ்பைடர், மாநாடு, என்று இவர் நடிப்புத்திறமையை மெச்சும் திரைப்படங்கள் பல உண்டு.
இந்நிலையில் அண்மையில் இவர் நடித்த பொம்மை திரைப்படத்தில் முதலில் ஒரு கதாநாயகி நடிக்க வந்த பொழுது அவரை அட்ஜஸ்ட்மென்ட்க்கு சூர்யா அழைத்ததாகவும், அதன் பிறகு அவரை படத்தில் நடிக்க வைக்கலாம் என்றும் அவர் கூறியதாகவும் பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார் பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர்.
வித்தகன் சேகர் சினிமா திரையுலகில் நடக்கும் பல அட்ஜஸ்ட்மென்ட் சம்பவங்கள் குறித்து அடிக்கடி youtube வீடியோக்களை பேசி வருவது குறிப்பிடத்தக்கது. அட்ஜஸ்ட்மென்ட்க்கு அந்த நடிகை ஒப்புக்கொள்ளாததால் அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரியா பவானி சங்கர் நடித்ததாவும் சேகர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொம்மை திரைப்படம் உள்பட இரு திரைப்படங்களில் அவருடன் நாயகியாக நடித்த ப்ரியா பவானி சங்கருக்கும் அதே நிலைதானா என்று கேட்டபொழுது, பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருவது இந்த உலகறிந்த விஷயம். ஆகையால் அவர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒப்புக் கொண்டிருக்க வாய்ப்புகள் இல்லை என்றும் கூறியுள்ளார் சேகர்.
நடிகைகளை முதலில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து பிறகு சூர்யா நடிக்க அனுமதிக்கிறார் என்ற வித்தகன் சேகரின் பரபரப்பு குற்றச்சாட்டு தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் High Paid வில்லன் இவர் தான்! ஆனால் அவர் விஜய் சேதுபதி அல்ல - மாஸ் காட்டும் "நாயகன்"!