ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இந்திய அளவில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சுஜீத் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ், பாலிவுட் ஸ்ரத்தா கபூர் நடிப்பில், யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கப்பட்ட சாஹோ, ஆகஸ்ட் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் வெளியானது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான பத்து நாட்களில் சுமார் ரூ. 400 கோடி ரூபாய் வசூலித்து அபார சாதனை படைத்திருக்கிறது.  இப்படம் வெளியாகும் முன்பே படத்தின் அனைத்து மொழி வியாபாரங்களில் சாதனை படைத்தது. மேலும் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமங்களிலும் படத்தின் பட்ஜெட்டை மிஞ்சி  அசத்தியிருக்கிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்துக்காக தாடி, மீசையை எடுத்து விட்டு இளமைத் தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித். ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த படமாக இது உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாகவும், படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருப்பது போல போட்டோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, அது பழைய போட்டோ, என்னை அறிந்தால் பட ஷூட்டிங் ஸ்பாட், இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும்? அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான் நடக்கிறது. அது முடிந்ததும், பட பூஜையன்று படக்குழுவினர் யார் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவிப்போம் என்றனர். 

விஜய், நயன்தாரா நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள பிகில்  வரும் தீபாவளி ரிலீசாக   இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு உரிமத்தை மகேஷ் கோனேரு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிகில் படம் தெலுங்கு நடிகர்களின் படங்களுக்கு இணையாக சுமார் 400 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.  

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் 3ஆம் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் கசிந்தது. இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்  'ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்வது போல, பனியனில் இருக்கும் போட்டோ ஒன்று வெளியிட்டது. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் முதலிடத்தில் வந்தது, அதிலும் 'வயசானாலும் உன்னோட ஸ்டைலும், கெத்தும் இன்னும் மாறல-னு'  படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் பேசிய வசனம் போட்டும் வைரலாக்கினர்.