ராதாரவி தலைமையில் இயங்கி வந்த டப்பிங் யூனியனுக்கு சீல் வைப்பு !
பழம்பெரும் நடிகர் ராதாரவி தலைமையில் இயங்கி வந்த, டப்பிங் யூனியனுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா துறையில் இருக்கும் 24 யூனியன்களில் முக்கியமானது டப்பிங் யூனியன். இதற்கான தேர்தல் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிலையில், அதில் பிரபல நடிகர் ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தலைவராக ராதாரவியும், பொதுச்செயலாளராக கதிரவன், பொருளாளராக சீனிவாசமூர்த்தி, ஆகியோர் உள்ளனர்.
Breaking: 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த் - யோகி பாபு!
துணைத் தலைவராக கே மாலா, எம். ராஜேந்திரன், எம் நாராயணமூர்த்தி, இணைச் செயலாளரான டி.கோபி, துர்கா சுந்தரராஜன், குமரன், ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில், பழம்பெரும் நடிகர் தலைமையில் செயல்பட்டு வரும் டப்பிங் யூனியன் கட்டிடம், அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகும், ராதாரவி தரப்பில் இருந்து தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், இன்று சாலிகிராமம் 80-அடி சாலையில் உள்ள டப்பிங் யூனியன் வளாகத்தை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனை தடுக்க ராதாரவி எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனளிக்காமல் போன நிலையில் இரவோடு இரவாக அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.