Cinema bits Nayanthara viknesh sivan karthi and al vijay
காத்துவாக்குல சில சினிமா செய்திகள்! அப்படியே போற போக்குல கொறிச்சுட்டே போகலாமா?...
* மோலிவுட்டின் செம்ம கெமிஸ்ட்ரி ஜோடியான பிரித்விராஜ்_ பார்வதியின் புதிய படமான ‘மை ஸ்டோரி’யின் இரண்டாவது போஸ்டர் சமீபத்தில் ரிலீஸாகியிருக்கிறது. ரோஷினி தினகரின் இயக்கம் மற்றும் இணை தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு கேரளாவை காதலில் உருக வைக்கும் என்று சேட்டன்கள் செமத்தியாய் எதிர்பார்க்கிறார்கள்.
* துல்கர் சல்மான் பாலிவுட்டில் கால் பதித்திருப்பது தெரிந்த சேதியே. அவரது ஹீரோயிஸத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘கர்வான்’ படத்தில் இர்ஃபான் கான் மற்றும் மிதிலா பால்கர் இருவரும் லீட் ரோல் செய்கிறார்கள். இந்த படத்தின் சில போர்ஷன்கள் தமிழ்நாட்டில் முடிக்கப்பட்டுவிட்ட நிலையில் கேரளாவை நோக்கி நகர்திருக்கிறது க்ரூ. கொச்சி, திருச்சூர் மற்றும் குமரகத்தின் சில லொகேஷன்களில் இந்த படம் ஷூட் ஆகப்போகிறது.
.jpg)
* ரத்தினவேல் பாண்டியன் எனும் போலீஸ் பாத்திரத்தில் ’சிறுத்தை’யில் புரட்டி எடுத்த கார்த்தி சில வெற்றி தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் யூனிஃபார்மை மிடுக்காக போட்டபடி நிற்கிறார். இவரது ‘தீரன் அத்தியாயம் ஒன்று’ நவம்பர் 17_ல் ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் கார்த்தியின் காக்கிச்சட்டையை தாண்டி அவரை லவ்வப் போவது ‘ஸ்பைடர்’ நாயகி ரகுல் ப்ரீத்தான். மச்சக்கார பருத்திவீரண்டா.
.jpg)
* சீயான் மூன்று கெட் அப்களில் கலக்கும் ‘துருவ நட்சத்திரம்’ துருக்கியில் வெறித்தனமாக ஷூட் ஆகிக் கொண்டிருக்கிறது. விக்ரமின் ஆஸம் பர்ஃபார்மென்ஸில் அதிசயித்து நிற்கிறாராம் கெளதம் மேனன். இதை அவரே ட்விட்டியிருக்கிறார்.
.jpg)
* கடந்த ஜனவரியில் தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். தமிழனின் அடையாளமாக ஃபோகஸ் செய்யப்படும் இந்த விளையாட்டு சினிமாவிலும் பவர் பேக்ட் ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விஜய்யின் ‘மெர்சல்’, விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ இரண்டிலும் சிலிர்ப்பான ஜல்லிக்கட்டு போர்ஷன்கள் இருக்கின்றனவாம்.

* நயனும், சிவனும் அமெரிக்காவில் உருகி மருகி கொண்டாடிய பர்த் டே போட்டோக்கள்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. நயனை விக்கி ‘சன்ஷைன்’ என்றுதான் செம செல்லமாக விளிக்கிறார்.
* விக்ரமின் கேரியர் கிராபை கன்னாபின்னாவென உயர்த்திய படம் சாமி. இப்போது இதன் இரண்டாம் பாகத்துக்கு கெத்தாக தயாராகிவிட்டார் இயக்குநர் ஹரி. முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே நெல்லை மற்றும் பழனி பகுதிகளில் இந்த முறையும் சென்டிமென்ட் ஷூட்டிங் இருக்கிறது.
* ஆளாளுக்கு பார்ட் 2 எடுக்கும்போது இயக்குநர் ஏ.எல்.விஜய் மட்டும் விட்டுவைப்பாரா. அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் தந்த ‘தேவி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்கிறார்கள். நடனப்புயல்தான் ஹீரோ. தமிழில் கணிசமான படங்களை கையில் வைத்திருக்கும் பிரபுதேவா அந்த கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு இதில் நுழைகிறாராம்.
