பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட்.  இவர் ஜுராசிக் பார்க்,   அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்டு கேம், உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கிறிஸ் பிராட் ஹாலிவுட் நடிகை , அன்னா பாரிஸ் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஜேக் என்ற 6 வயது மகன் உள்ளான்.  இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பிறகு பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் மகள் கேத்தரினை காதலித்து வந்தார். இவர் எழுத்தாளராக உள்ளார்.  கடந்த ஜனவரி மாதம் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.  

இந்நிலையில் இவர்களது, திருமணம் கலிபோர்னியாவில் நடந்துள்ளது.  இதில் அர்னால்ட் தனது மனைவி மரியாவுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.  திருமண புகைப்படத்தை நடிகர் கிறிஸ் பிராட் சமூகவலைதளத்தில் வெளியிட்டு கேத்தரின் திருமணத்திற்கு சம்மதித்தது மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  இந்த வாழ்க்கையை உங்களை விட்டு வேறு யாருடனும் வாழ விரும்ப மாட்டேன் என்று கேத்தரினும் குறிப்பிட்டுள்ளார்.  இவர்கள் திருமணத்திற்கு இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.