Cobra movie  Release date : விக்ரம் தற்போது நடித்து முடித்துள்ள கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோவாக வெளியாகியுள்ள இதில் மேப்பில் ஆகஸ்ட் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான மஹான் படத்திற்கு முன்னதாகவே நடிகர் விக்ரம் கோப்ரா படத்தில் கமிட்டாகி இருந்தார். கடந்த 2019 -ம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது. பின்னர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்றது. இறுதி கட்டத்தை நெருங்கையில் கொரோனா பரவல் அதிகரித்ததால் படப்பிடிப்பு தாமதமானது. பின்னர் விக்ரம் பொன்னியின் செல்வன், மஹான் உள்ளிட்ட படங்களில் பிஸியானார். இதையடுத்து சமீபத்தில் தான் இந்த படத்தின் இறுதி கட்டம் முடிவடைந்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாக உள்ளார். 

விக்ரம் பல்வேறு கெட் அப்களில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே தும்பி துள்ளல் என்கிற பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. ரிலீசுக்கு தயாராக உள்ள இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோவாக வெளியாகியுள்ள இதில் மேப்பில் ஆகஸ்ட் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது.

YouTube video player