தள்ளாத வயதிலும் பிள்ளைகளால் கை விடப்பட்ட பல, முதியோர்கள் வேலை செய்து வாழ்வதும், முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடையும் சம்பவங்களும் சாதாரணமாகவே தமிழ் நாட்டில் அதிகம் பார்க்கமுடிகிறது.

ஆனால் இன்னும் சிலரோ, யார் தயவில் வாழ கூடாது. இருக்கும் வரை தனக்கான பணம், உணவை தானே உழைத்து உன்ன வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளனர்.

அப்படி பட்டவர் தான், மெர்சல், விசுவாசம், போன்ற பல முன்னணி நடிகர்கள் படங்களில், காதில் பெரிய தொங்கட்டான் தோடு, இரு மூக்கிலும் மூக்குத்தி, கண்டாங்கி புடவை என தோற்றமளிக்கும் சிட்டு குருவி பாட்டி. 

திரைப்படங்களை தாண்டி, சீரியல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்து வரும் சீரியல் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடர் 500 எபிசோடுகளை கடந்துள்ளதை கொண்டாடும் விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், பேசிய சிட்டுக்குருவி பாட்டி. தன்னுடைய பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் நடத்தி வச்சிட்டேன். இரண்டு மகன்கள் சினிமாவில் தான் வேலை செய்யுறாங்க. அவங்களை பார்க்க வரும் போது தான், சங்கர் சார் பார்ப்பேன். 

ஒரு படத்தில் நடிக்க துவங்கியதுமே, அடுத்தடுத்த வாய்ப்பு வந்துச்சி. நடிக்குறது மட்டும் தான் என்னோட சந்தோஷமே. இந்த வயதிலும் யார் கையையும் எதிர்பார்க்காமல், நானே உழைத்து சாப்பிடணும் என்பதற்காக தான் இப்போதும் நடித்து கொண்டிருப்பதாக கண் கலங்கியவாறு கூறியதும் அரங்கமே அவருக்கு எழுந்து நின்று கை தட்டியது.