சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அதாவது டிசம்பர் 9ஆம் தேதி இரவு... விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் என்கிற நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் தான் கடைசியாக கலந்து கொண்டார். தன்னுடைய அம்மாவிற்கு போன் செய்த போது கூட, ஸ்டார்ட் மியூசிக் ஷூட்டிங்கில் இருப்பதாக அவர் கூறியது அனைவரும் அறிந்தது தான். 

இங்கு ஷூட்டிங் முடிந்த பினாரே, பூந்தமல்லி அருகே நாசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கணவர் ஹேமந்த்துடன் வந்து அரை எடுத்து தங்கியுள்ளார். அப்போது தான் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, பின்னர் தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளார்.

இவரது தற்கொலை சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது சித்ராவின் கணவர் ஹேமந்த்தை 6 நாள் விசாரணைக்கு பின்னர் போலீசார் தற்போது கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே நேரத்தில், சித்ரா - ஹேமந்த் இருவரும் அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்ட இரண்டு மாதத்திலேயே சித்ரா இறந்துள்ளதால், மற்றொரு புறம் ஆர்.டி.ஓ விசாரணையும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று சித்ராவின் குடும்பத்தினரை விசாரணை செய்த ஆர்.டி.ஓ அதிகாரிகள் இன்று ஹேமந்த்தின் பெற்றோர், மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணையை நடத்தினர்.

இந்த நிலையில், சித்ரா கடைசியாக கலந்து கொண்ட ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பாட்டு பாடியது, ஆடியது, சிரித்தது, போன்ற சந்தோஷமான நினைவுகளை விஜய் டிவி தன்னுடைய புரோமோவில் வெளியிட்டுள்ளது. சித்ரா கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது