பழம் பெரும் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரனும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் சகோதரி மகனனுமான (மருமகன்) கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நேற்று மதியம் மாரடைப்பால் உயிரிழந்தார். 39 வயதே ஆன சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியது. 2009ம் ஆண்டு வயுபுத்ரா என்ற கன்னட படம் மூலம் அறிமுகமான சிரஞ்சீவி சார்ஜா, இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவரது கைவசம் 4 படங்கள் இருந்துள்ளன. 

நடிகை மேக்னா ராஜை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவிற்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த மரண செய்தி தந்த வலியில் இருந்து மீள்வதற்குள் சிரஞ்சீவி சார்ஜா குறித்து அடுத்தடுத்து கிடைக்கப்பெறும் செய்திகள் சோகத்தை அதிகரிக்கிறது. 

இதையும் படிங்க:  கதறி அழும் கீர்த்தி சுரேஷ்...கோடாரியால் வெட்டித் தள்ளும் கொலைகாரன்...வெளியானது மிரட்டலான “பெண்குயின் டீசர்!

பிரபல நடிகையும், சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியுமான மேக்னா ராஜ் தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளாராம். 10 ஆண்டுகளாக காதலித்த சிரஞ்சீவி சார்ஜாவும், மேக்னா ராஜும் 2018ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இரண்டு ஆண்டுகள் இன்பமயமாக நகர்ந்த இவர்களது காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக மேக்னா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். முன்னதாகவே இதை அறிவிக்கலாம் என இருவரும் நினைத்துள்ளனர். ஆனால் ஆரம்ப கட்டம் என்பதால் சிறிது காலம் பொறுத்திருந்து அறிவிக்கலாம் என முடிவு செய்துள்ளனர். 

 

இதையும் படிங்க: யுவனை மதம் மாற்றினேனா?... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...!

தற்போது லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருந்த சிரஞ்சீவி சார்ஜா மனைவியை ஒருவேலை கூட செய்யவிடாமல் அனைத்தையும் தானே செய்துள்ளார். அப்பா, அம்மாவாகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் சந்தோஷமாக இருந்த சிரஞ்சீவி, மேக்னா தம்பதியின் கனவு இப்படியொரு சோகத்தில் முடிவடைந்திருக்க வேண்டாமென திரைத்துறையினரும், ரசிகர்களும் வேதனை அடைகின்றனர்.