தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த த்ரிஷா, தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் உடன் ராம் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மூத்த ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் த்ரிஷா, மெகா ஸ்டாருக்கு ஜோடியாக “ஆச்சார்யா” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சுமார் 5 வருடத்திற்கு பிறகு சிரஞ்சீவியுடன் நடிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை திடீர் என்று உதறித்தள்ளினார். 

இதையும் படிங்க:  “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

இதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்த த்ரிஷா, “சில சமயங்களில் ஆரம்ப கட்டத்தில் சொல்லப்பட்ட, ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள், திடீரென முற்றிலும் மாறிவிடுகிறது. படைப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிரஞ்சீவி சாரின் படத்தில் இருந்து விலகுகிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். என் அன்புடைய தெலுங்கு ரசிகர்களே உங்களை மறுபடியும் எனது அடுத்த படத்தில் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். 

இதையும் படிங்க: மீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...!

இதுகுறித்து மெளனம் காத்து வந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது உண்மையை போட்டுடைத்துள்ளார். “ஆச்சார்யா படத்தில் இருந்து த்ரிஷா விலகியதாக தகவல் கிடைத்ததும் படக்குழுவினரிடம் விசாரித்தேன். யாராவது த்ரிஷா மனம் கஷ்டப்படும் படி நடந்து கொண்டீர்களா? என்று கேட்டேன். அப்போது தான் த்ரிஷா மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாகவும், அந்த படத்திற்கு நிறைய நாட்கள் தேவைப்பட்டதால் எனது படத்திலிருந்து விலகியதாகவும் தகவல் கிடைத்தது” என்று ஓபனாக போட்டுடைத்துவிட்டார். 

இதையும் படிங்க: கொரோனாவை தட்டித்தூக்கிய தாய் பாசம்...ஊரடங்கில் சிக்கித் தவித்த மகனுக்காக ஸ்கூட்டரில் 1400 கி.மீ. பயணித்த தாய்!

த்ரிஷாவிற்கு மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாம். எங்க ஆச்சார்யா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் கால்ஷீட் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் விலகியிருக்கிறார். போனவர் சும்மா போயிருந்தாலும் பரவாயில்லை, கொடுத்த வாக்கை காப்பற்றவில்லை என்று சிரஞ்சீவியை வேறு அசிங்கப்படுத்திவிட்டார். இதனால் மெகா ஸ்டார் ரசிகர்கள் த்ரிஷா மீது செம்ம கடுப்பில் உள்ளார்களாம்.