Chiranjeevi Nagarjuna followed by Ranas jackpot
உலகளவில் பெரும் சாதனை படைத்து வருகிறது பாகுபலி.
இதில் பாகுபலி பிரபாஸ்க்கு நிகராக தன் திறமையை வெளிப்படுத்தினார் வில்லன் பல்வாள தேவன் ராணா.
தற்போது இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் “மீலோ எவரு கோடீஸ்வரரு” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க போகிறாராம்.
அதாங்க உங்களில் யார் அடுத்த கோடீஸ்வரர்.
இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இனி ராணா தொகுத்து வழங்குவார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஷோ வரபோகிறது.
மிகவும் கலகலப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.
