Asianet News TamilAsianet News Tamil

உறுதியான விவாகரத்து.. பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் நிஹாரிகா அறிவிப்பு!

நடிகை நிஹாரிகா தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்" திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Chiranjeevi Brothers Daughter and Actress Niharika officially divorced Chaitanya
Author
First Published Jul 4, 2023, 9:50 PM IST

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் தான் நிஹாரிகா. "ஓக்க மனசு" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமானவர் தான் இவர். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்" திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 5 திரைப்படங்களில் நடித்திருந்தார், அதன் பிறகு தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சைதன்யா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். 

இந்த திருமணம் மிகப்பெரிய அளவில் நடிகர் சிரஞ்சீவியின் தலைமையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரும் அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. 

அதே நேரத்தில் நிஹாரிகா தரப்பில் இருந்தும் அந்த செய்திக்கு எந்த விதமான மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது கிடைத்திருக்கும் தகவலின் படி நிஹாரிகா மற்றும்  சைதன்யாவை சட்டப்படி விவாகரத்து செய்து இருக்கிறார். 

இருவரும் மனமொத்து விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு விவாகரத்து அளிக்கப்படவுள்ளது.

இதையும் படியுங்கள் : ஹீரோ அவதாரம் எடுக்கும் டான்ஸ் மாஸ்டர் ஜானி! 

Follow Us:
Download App:
  • android
  • ios