வெள்ளித்திரையில் 'சின்னதம்பி' என்கிற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து,  இன்றுவரை பல ரசிகர்களால் சின்னத்தம்பியாகவே, பார்க்கப்படுபவர் நடிகர் பிரபு.

இவர் நடிக்கும் படத்தில்,  தற்போது சின்னத்தம்பி என்கிற சீரியலில் மூலம் நடிகர் பிரஜினுக்கு அம்மாவாக நடித்து, பிரபலமான அணிலா ஸ்ரீகுமார் மனைவியாக நடிக்க உள்ளது அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தன்னுடைய திரையுலக வாழ்க்கை குறித்து கூறியுள்ள அவர், முதில் அறிமுகமான மலையாள படம் தோல்வி அடைந்ததால்,  சின்னத்திரையை தேர்வு செய்தேன், கடந்த 2005 ஆம் ஆண்டு தேனியில் தன்னை வைத்து உருவான ஒரு சீரியல் டிராப் ஆனது. இதனால் மிகவும் மனவருத்தத்துடன் சீரியல வாய்ப்பு கிடைக்கவில்லை என்று மிகவும்வருந்தினேன்.

பின் சின்னதம்பி சீரியல் இயக்குனர், ராசா தனக்கு அன்னலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்த சீரியல் மூலம் பலருக்கும் இன்று நான் அன்னமாக தான் தெரிகிறேன். மேலும் வெள்ளி திரை வாய்ப்புகள் குறித்து கூறியுள்ள அவர், படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியே கூறாமல் வெள்ளித்திரையில் சின்னத்தம்பிக்கு  மனைவியாக நடித்து வருவதாக கூறியுள்ளார்.