வைரமுத்து எழுதிய நூலை வெளியிட்ட முதல்வர்... ஆத்திரத்தில் சின்மயி போட்ட எக்ஸ் பதிவு வைரல்
வைரமுத்து எழுதிய மகா கவிதை என்கிற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டதால் சின்மயி ஆத்திரமடைந்துள்ளார்.
பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கடந்த 2018-ம் ஆண்டு மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சின்மயியின் குற்றச்சாட்டுக்கு இதுவரை தக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டாலும், தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக குரல் கொடுத்து வருகிறார் சின்மயி.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து எழுதிய மகா கவிதை என்கிற நூல் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டு இந்த நூலை வெளியிட்டனர். இதுகுறித்த புகைப்படம் வெளியானதை பார்த்து கடுப்பான சின்மயி காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... இரவு விடுதியில் குத்தாட்டம் போட்டு புத்தாண்டை வரவேற்ற அமைச்சர் ரோஜா
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் போட்டுள்ள பதிவில், “நான் தடைசெய்யப்பட்டபோது தமிழகத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் சிலர் என்னை துன்புறுத்தியவரை மேடையேற்றினர். எனது பல வருட வாழ்க்கை தொலைந்துவிட்டன. பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் இதுபோன்ற சூழல் உருவானால் நேர்மையாகப் பேசும் நபர்களும் முடங்கிப்போவார்கள். ஆனால் என் விருப்பம் நிறைவேறும் வரை நான் பிரார்த்தனை செய்வேன், தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன். இதைத்தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது என பதிவிட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் நீங்க ஏன் பெண்கள் பாலியல் குற்றங்கள்ளுக்கு எதிராக ஒரு அமைப்பு தொடங்க கூடாது? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த சின்மயி, தொடங்கி எவரிடம் நியாயத்துக்கு போவது, இவங்க கிட்டையா? வைரமுத்து கூட மட்டும் எத்தனை அரசியல்வாதிகள் இருக்காங்கனு கொஞ்சம் பாருங்க. இதுபோன்ற சூழலில் எப்படி நியாயம் கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... வார்னிங் கொடுத்த பரணி... ஜெயிலில் இருந்து எஸ்கேப் ஆன சண்முகம் - அண்ணா சீரியலில் செம்ம டுவிஸ்ட் வெயிட்டிங்