வைரமுத்து  தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என  பாடகி சின்மயி அண்மையில் புகார் கூறி, அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்த மீடூ விவகாரம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. வைரமுத்துவின் ஆதரவாளர்களாக இருக்கும் சிலர், பாடகி சின்மயியை வலைத்தளங்களில் அசிங்க அசிங்கமாக திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

வைரமுத்துவால் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து, சின்மயி, தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார். சின்மயிக்கு ஆதரவாகப் பல நடிகர், நடிகைகள் குரல் கொடுத்து வந்தனர். சினிமா உலகில் இருக்கும் ஒரு சிலர், சின்மயியை மோசமாக திட்டி தீர்த்தனர். 

இதன் உச்சகட்டமாக டப்பிங் சங்கத்தில் இருந்தும் சின்மயியை நீக்கினர். ஆனாலும், வைரமுத்து மீது சின்மயி சட்ட ரீதியிலான எந்தவிதமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதை வைத்து, 'வைரமுத்து மீது சின்மயி கூறும் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், ஏன் புகார் அளிக்கவில்லை?  என பலரும்,  ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில்  கேள்வி கேட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வைரமுத்துவிற்கு ஆதரவாக ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சின்மயிடம் புகார்கள் உண்மையாக இருந்தால் சட்டப்படி ஏன் புகார் அளிக்கவில்லை. இதற்கு ஒரே வழி, உண்மை கண்டறியும் சோதனை தான் அதற்கு சின்மயி தயாரா என்றும் தரக்குறைவாகவும்  கேள்வி எழுப்பி இருந்தார். இந்தக் கேள்விக்குப் பின் டென்ஷானான சின்மயி, உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் ரெடி. நீ ஆம்பளையா இருந்தா முதலில் அதை செய், நீங்க எங்கு கூப்பிடுகிறீர்களோ, அங்கு வர நான் தயாராக இருக்கிறேன்'   மீடியாவை வர சொல்லு. ஒரே நேரத்தில் இருவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடக்கட்டும். அப்போது உண்மை தெரிந்து விடும். 

அதை விட்டு விட்டு 'கணவரை தவிர நீ யாரிடம் படுக்கிறாய்?' என்றெல்லாம் கேள்வி கேட்காத, உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்பாடு செய்,  நானும் வரேன் என பயங்கரமாக பதிலடி கொடுத்துள்ளார்.