வைரமுத்துவின்  இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு "வைரமுத்து இலக்கியம்-50" என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் இன்று வெளியிட்டார்.. இதற்கு சின்மயி உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

"கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு தெய்வம் தந்த பூவே" என்ற பாடலின் மூலம் திரைப் பயணத்தை தொடங்கியவர் சின்மயி, மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். 

அதேபோல யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் அவர் குரல் ஒலித்தது. மும்பையில் பிறந்த அவர் தன் பள்ளிப்படிப்பை சென்னையில் தொடங்கி, கர்நாடக இசை மற்றும் கஜல், இந்துஸ்தானி போன்றவற்றை முறையாக கற்றவர் ஆவார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் எந்த கவிஞரின் பாடலை பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கினாரோ அந்த கவிஞர் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகம் அதிர்ச்சி அடைய வைத்தது. 

இதுதவிர வைரமுத்துவுக்கு யாரேணும் சினிமாவில் வாய்ப்பு கொடுத்தால் அவர்களை கடுமையாகி சாடி வந்தார். சின்மயி மீடூ புகார் கூறிய பின்னர் பலரும் தங்களுக்கு நடந்த அத்துமீறல்கள் குறித்து தைரியமாக பேச தொடங்கினர். அதில் ஒருவர் தான் லீனா மணிமேகலை. அவர் இயக்குனர் சுசி கணேசன் மீது மீடூ புகார் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தன்னை மிரட்டுவதாகவும் சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
தமிழில், கந்தசாமி, 5 ஸ்டார், திருட்டு பயலே 2 போன்ற படங்களை இயக்கிய சுசி கணேசன் அண்மையில், வஞ்சம் தீர்த்தாயடா என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். மேலும் அப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறி இருந்தார்.

பாடகி சின்மயி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவருடன் பணியாற்றுகிறோம் என்பது ராஜா சாருக்கோ அல்லது அவரது குழுவுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பிய சின்மயியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் இன்று வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு "வைரமுத்து இலக்கியம்-50" என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் வெளியிட்டார்.. இதற்கு சின்மயி உள்ளிட்ட சிலர் முதல்வருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள சின்மயி; கொஞ்சமும் கவலைப்ப என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்..ட முடியவில்லை. ஒருவேளை நான் உன் சகோதரியாக இருந்து அவனால் துன்புறுத்தப்பட்டாலும் நீ இன்னும் தீவிட்டியைப் பிடித்துக் கொண்டு செல்வாய். நம்ம ஊர்காரங்க புத்தி இவ்ளோ கேட்கலாம் தான். எல்லாம் அவன் அவனுக்கு அவன் வீட்டில் நடக்கட்டும் அப்பா தெரியும். வ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார் சின்மயி.. 


Scroll to load tweet…