பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் வரும் தினமான நேற்று, இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. குறிப்பாக இந்த வாரம் வெளியேறப் போவது யார்? மற்றும் காப்பாற்றப்பட போவது யார்? என்பது போன்ற கேள்விகளும் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம், மீரா மிதுனை, வெளியேற்றுவது போல் வெளியேற்றி, அவரை ரகசிய அறையில் வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இது ஒரு பக்கமிருக்க, நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது,  மீரா,  சேரனிடம் கடுமையாக பேசியதை நாசுக்காக சுட்டிக்காட்டினார். 

அப்போது, அந்த காலத்தில் பஸ்ஸில் மிகவும் கூட்டமாக இருக்கும். போகவே முடியாது, அவரவர் வேண்டும் என்றே இடிக்க மாட்டார்கள், அலுவலகம் செல்ல வேண்டும் என்கிற அவசரத்தில் இருப்பார்கள். இது மட்டும் இன்று பெண்களை உரசுவதற்காகவே சிலர் வருவார்கள் என்கிறார். அப்போது நடிகர் சரவணன் கையை தூக்கி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் பெண்களை உரசுவதற்காகவே பஸ்சில் சென்றிருக்கிறேன் என வெளிப்படையாகக் கூறினார்.

இதற்கு கமல் அதையும் தாண்டி புனிதமாக ஆகிவிட்டார் என கூற ஆடின்ஸ் கைதட்டினர். இந்த நிகழ்விற்கு பிரபல பாடகி சின்மயி தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார்.  

இது குறித்த வீடியோ ஒன்றை ரசிகை, சின்மயிக்கு அனுப்ப, சின்மயி "தமிழ் சேனல் அந்த நபர் பெண்களை பலவந்தபடுத்துவதற்காக பஸ்ஸில் சென்றேன் என தைரியமாக கூறியதை ஒளிபரப்புகிறது. மக்களிடம் பாராட்டை பெறுவதற்காக. இது பார்வையாளர்களுக்கும் கைதட்டும் பெண்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஜோக்காக தெரிகிறது. கேவலமாக இருக்கிறது என கூறி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.