பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமாற்றியுள்ள புகார் தான் தற்போது, கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இவரை தொடர்ந்து, முகம் தெரியாதவர்கள் கூட வைரமுத்து மீது, தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள். 

ஏற்கனவே இது குறித்து, " தொடர்ந்து தான் சமீப காலங்களாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதனால் உண்மையில்லாத விஷயங்களை தான் கண்டு கொள்வதில்லை' என தெரிவித்திருந்த நிலையில், வைரமுத்துவுக்கு எதிராக அவருடைய மகன் உட்பட சமந்தா, ஆண்ட்ரியா, கமல் ஆகிய பல பிரபலங்களும் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர். 

ஆனால் சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்கள் ... சின்மயிடம் தொடர்ந்து ஒரு கேள்வியை முன் வைத்து வந்தனர். அது "நீங்கள் வைரமுத்துவிடம், பாலியல் சர்ச்சையில் சிக்கி  இருக்கும் நிலையில் ஏன்? அவரை உங்களுடைய திருமணத்திற்கு அழைத்து அவருடன் நெருக்கமாக போட்டோ எடுத்து மிகவும் அன்பாக காலில் விழுந்து ஆசீர் வாதம் வாங்குனீர்கள் என்பது தான்.

ஆனால் இந்த கேள்விக்கு சின்மயியின் தாய் பல்வேறு ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கு பதில் கொடுத்து வருகிறார்.  இது குறித்து அவர் கூறுகையில்...  ‘அவரை மட்டும் அழைக்கவில்லை என்றால் இந்த உலகம் தவறாக பேசும், அந்த சமயத்தில் எனக்கு சுயமரியாதை பற்றி எல்லாம் தோன்றவில்லை’ அவரை அழைத்ததற்கு நான் தான் காரணம். சின்மயிக்கு இதில் உடல்பாடு இல்லை என்பது போல் தெரிவித்துள்ளார்.

மேலும் மேலும்... வளர்ந்து வரும் இந்த பிரச்சனை எங்கு போய் முடிய போகிறது என்று தான் தெரியவில்லை.