திரையுலகில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும்  மீ டூ மூவ்மெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இநநிலையில் கவிஞர் வைரமுத்து மீது, பாடகி சின்மயி படு பயங்கரமாக பாலியல் குற்றச்சாட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால் சின்மயி   ஆதாரம் இல்லாமல் விளம்பரம் தேடுவதற்காக  பொய் புகார் தெரிவித்தாக நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். அவர்கள் தங்கள்  டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் கடந்த ஆண்டு  பாடகி சுசித்ரா, தனது  சுசி லீக்ஸின் ஒரு பகுதியாக சின்மயி குறித்து தெரிவித்ததை தேடிக் கண்டுபிடித்து பதிவிட்டுள்ளனர்

அதில் 2016ம் ஆண்டில் பாடகி சின்மயி 4 முறை கருவை கலைத்ததாகவும்,  சின்மயி அட்ஜஸ்ட் செய்து கொண்டுதான் பாடுவதற்கு வாய்ப்புகள் பெறுவதாகவும்  குறிப்பிட்டிருந்த சுசித்ராவின் ட்வீட்டுகளை மற்றும் வீடியோவை வெளியிட்டு  கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள பாடகி சின்மயி, நெட்டிசன்கள் தன்னை தொடர்ந்து கேவலமாக விமர்சித்தற்கும்,  சுசிலீக்ஸ் குறித்த  உண்மையை தெரிவிப்பதற்கும் இது தான் எனது பதில் என கூறி முகநூலில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தான் 4 முறை கருகலைப்பு எல்லாம் செய்யவில்லை என்றும், சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை பற்றி தவறாக பேசினார். அதில் உண்மை இல்லை. அதற்காக அவர் இமெயில் மூலம் மன்னிப்பு கேட்டார். அந்த இமெயிலை பப்ளிக்காக வெளியிட வேண்டும் என்று தோன்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் ,  சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லாதபோது அவர் சின்மயி மீது புகார் தெரிவித்தார் என்று ட்வீட் செய்துள்ளார் என்றும் அதை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பட வாய்ப்பு பெறுவதற்காக  தான் எந்த அட்ஜஸ்ட்மென்ட்டும் செய்யவில்லை என்றும் சின்மயி மறுத்துள்ளார்.