நயன்தாரா குறித்து ராதாரவி தெரிவித்த சர்ச்சை குறித்து சின்மயி ட்வீட் செய்துள்ளார்.

நடிகை த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய ஆபாச கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகை த்ரிஷா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், குஷ்பு, சின்மயி உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகானுக்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மகளிர் ஆணையம் டிஜிபிக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி தனது X வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ அனைவரும் மன்சூர் அலி கானை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் தற்போது நிறைய மாற்றம் தெரிகிறது. உண்மையில் இது ஒரு நல்ல விஷயம், சாக்கடையை புறக்கணிப்போம் என்று சொல்வதை விடுத்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்வது அவசியம் என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் பார்க்கிறார்கள்.

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால் நயன்தாரா தனது சொந்த படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்ட போது ராதாரவி அவரை அவதூறாக பேசினார். அவர் பேசி 2 நாட்கள் யாரும் கண்டிக்கவில்லை, யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை, 'விளக்கம் கொடுங்கள்', மன்னிப்பு கேட்கவில்லை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரிக்கவில்லை. அப்போது திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Scroll to load tweet…

பாஜகவில் இணைந்து மீண்டும் நயன்தாராவை அவதூறாகப் பேசினார். தேசிய மகளிர் ஆணையம் அதை மீண்டும் புறக்கணித்தது. சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் த்ரிஷா விவகாரத்தில் பலரும் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த போக்கு தொடரும் என்று நம்புகிறேன், ஏனென்றால் தொழில்துறையில் நிறைய ஆண்கள் தாங்கள் பணிபுரியும் பெண்களைப் பற்றி இப்படி பேசுகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய வீடியோவையும் சின்மயி பதிவிட்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக சார்பில் பிரச்சாரம் செய்த போது ராதாரவி பேசிய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.