சீன மக்களை கடந்த இரண்டு மாதமாகவே,  கொரோனா வைரஸ் ஆட்டி படைத்தது வருகிறது. நாளுக்கு நாள் இந்த உயிர் கொல்லி வைரஸால் பலர் உயிரிழந்து வருகின்றனர். 

கொரோனா வைரஸால் சுமார் 70 ,000 பேர், பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 1800 பேர் உயிரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல சீன திரைப்பட இயக்குனர் சாங் காய் (Chang Kai ), கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்கியதால் உயிரிழந்தார்.  மேலும் தற்போது சாங் காயின் மனைவியும், மிகவும் ஆபத்தான நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிர் பிரியும் முன்... சாங் காய் தனது கடைசி பதிவில், தனது குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டபோது அவர்கள் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முயன்றனர். ஆனால் படுக்கைகள் இல்லாததால் அவர்கள் நிராகரிக்கப்பட்டனர் என்று தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். 

மேலும் செய்திகள்: தர்ஷனுக்கு பிடிக்காத பிகினி உடையில் படு மோசமான கவர்ச்சி! நீச்சல் குளத்தை சூடேற்றிய ஷெரின்! ஹாட் கிளிக்ஸ்!
 

கொரோனா வைரஸை எதிர்ப்பதற்காக சீன அரசாங்கம் ஆறு நாட்களுக்குள் புதிதாக  மருத்துவமனையை கட்டியிருந்தாலும், அவர்கள் நோய் தீவிரமடைந்த நிலையில் தான்   சிகிச்சை பெற முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

சாய் காய், உயிரினழந்த நிலையில்... அமெரிக்காவில் மேல் படிப்பு படித்து வரும் அவருடைய மகன் சீனாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் மனைவியும் மோசமான நிலையில் உள்ளார். இந்த செய்தியை கேட்பவர்கள் மனதையே கணக்கா செய்துள்ளது.