ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு நெல்சனை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்!
'ஜெயிலர்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்துவிட்டு நெல்சன் திலீப் குமாரை வாழ்த்தியுள்ளார். இது குறித்து புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் நெல்சன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நேற்று உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியானது ஜெயிலர் திரைப்படம். ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில், தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு, ஒரு சிலர் வழக்கம் போல் நெகடிவ் விமர்சனங்களை தெரிவித்து வருவதையும் சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து, திரையுலகினரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. மேலும் தளபதி விஜய் நெல்சன் திலீப் குமாரை தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட, விஜய் கொடுத்த ஊக்கத்தால் தான் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறியதாகவும் தெரிவித்திருந்தார் நெல்சன் .
Breaking: நடிகர் சத்யராஜின் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!
'ஜெயிலர்' திரைப்படம் ரஜினிகாந்தின் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடுவது போல் அமைந்துள்ளதாகவும், இப்படத்தில் நடித்துள்ள மற்ற பிரபலங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்த்து ரசித்துள்ளார்.
திரையுலகில் 45 வருடங்களை நிறைவு செய்த ராதிகா! இடைவிடாத சாதனை.. கணவருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!
இது குறித்து நெல்சன் திலீப்குமார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், போட்டுள்ள பதிவில் "மாண்புமிகு முதலமைச்சர் 'ஜெயிலர்' படத்தை பார்த்து பாராட்டியதற்கும், ஊக்குவித்ததற்கும் மிகவும் நன்றி. உங்களுடைய வார்த்தைகள் எங்களுடைய குழுவினரை மிகவும் சந்தோஷப்படுத்தியது என தெரிவித்துள்ளார். இந்த பதிவுடன் முதல்வருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் நெல்சன் வெளியிட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.