நடிகர் சிவகார்த்திகேயன், பாக்யராஜ், உள்ளிட்ட பல பிரபலங்கள் பார்த்து பாராட்டிய சிறு பட்ஜெட் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன், பாக்யராஜ், உள்ளிட்ட பல பிரபலங்கள் பார்த்து பாராட்டிய சிறு பட்ஜெட் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் தயாரித்துள்ள, 'சிதம்பரம் ரெயில்வேகேட்' திரைப்படம், கொரோனா தளர்விற்கு பின் அனைத்து பணிகளும் துரிதமாக முடிக்கப்பட்டு இன்று திரைக்கு வர உள்ளது. கார்த்திக் ராஜா இசையமைத்துள் இந்த படத்தில், இசைஞானி இளையராஜா ஒரு பாடல் பாடியுள்ளாதால் இப்படத்தின் பாடலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன், மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார். நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார், இரண்டாம் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர். வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் படத்தொகுப்பில், இந்த படத்தை சிவ பாலன் என்பவர் இயக்கியுள்ளார். பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வெளியாகும் இந்த சிறிய பட்ஜெட் படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்பதே, படக்குழுவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.