மண்டபத்துல கல்யாணம் பண்ணி பாத்திருப்பிங்க, கோவில்ல கல்யாணம் பண்ணி பாத்திருப்பிங்க ஆனா ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் வித்தியாசமான முறையில் திருமணம் செய்துள்ளார். இன்று ரஜியின் பேட்ட  திரைப்படம் வெளியாகி பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரஜினி ரசிகர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் இன்று வெளியாகியுள்ளன. அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியாக பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியிடப்பட்டன. இதனால் மிகுந்த உற்சாகத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றன. 

அதிகாலையே ரசிகர்களை தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்தனர். பட்டாசு வெடித்தும் உற்சாகமாக ஆடிப்பாடியும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் பல திரையரங்குகள் திருவிழா போல காட்சியளித்தது. 

இந்நிலையில் பேட்ட திரைப்படம் வெளியான சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரஜினி ரசிகர் ஒருவர் திருமணம் செய்துகொண்டார். இவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. தியேட்டருக்கு வெளியேயே மேடை அமைத்து திருமணம் நடந்தது. ஐயர் வரவழைக்கப்பட்டு, சடங்குகள் எல்லாம் செய்து முறையாக இந்த திருமணம் நடைபெற்றது. இவரது உறவினர்கள் திருவிழாவில் பங்கேற்றனர். திரையரங்கு வளாகத்தில் திருமணம் செய்த அன்பரசு-காமாட்சி ஜோடிக்கு ரஜினி ரசிகர்கள் சீதனமும் தந்தனர்.