நேற்றைய தினம் கேரளாவில் தலைமறைவாகி இருந்த மீரா மிதுனை தமிழ்நாடு போலீசார் கைது செய்த நிலையில், தற்போது இவரிடம் போலீசார் அனல் பறக்கும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

நேற்றைய தினம் கேரளாவில் தலைமறைவாகி இருந்த மீரா மிதுனை தமிழ்நாடு போலீசார் கைது செய்த நிலையில், தற்போது இவரிடம் போலீசார் அனல் பறக்கும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சர்ச்சையின் மறு உருவமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நோக்கத்தோடு வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவதும் இவரது வழக்கம். அந்த வகையில் மீராமிதுன் பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு உள்ளிட்டோர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் போலீசில் ஆஜராகாமல், என்னை யாராலும் கைது செய்ய முடியாது என, வீடியோ வெளியிட்டு போலீசாருகே சவால் விடுத்தார்.

இதனால் மீரா மிதுனை நிச்சயம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று கேரளாவில் பதுங்கி இருந்த அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது, இவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, என்னை தொட்டால் கத்தியால் குத்திக்கொண்டு இறந்து விடுவேன் என கலாட்டா செய்த வீடியோ ஒன்றும் வைரல் ஆகியது.

தற்போது கேரளாவில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனை போலீசார் சென்னை அழைத்து வந்த நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள, சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் அனல் பறக்கும் விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.