சென்னையில் மிகவும் பழமையான திரையரங்குகள் அடுத்தடுத்து மூடப்பட்டும் அவலம் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணவேனி, ஆனந்த், பைலட், சாந்தி ஆகிய தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபத்தில் 1970ம் ஆண்டு முதல் இன்று வரை பெரும்பாலான சென்னைவாசிகளின் பிரதான தியேட்டராக இருந்து வருகிறது ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்பட்டது. கோலிவுட்டின் தனி அடையாளமான ஏவிஎம் ஸ்டுடியோஸுக்கு அருகிலேயே வடபழனி சாலையில் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் அமைந்திருந்தது.

 

இதையும் படிங்க:  மாளவிகா மோகனனை தட்டித்தூக்கிய லாஸ்லியா... புதுசா அடிச்ச ஜாக்பாட் பற்றி வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

காலத்திற்கு ஏற்ற மாதிரி தியேட்டர்கள் அனைத்தும் புதுப்பொலிவிற்கு மாறி வருகின்றன. ஆனால் பழமை மாறாமல், அதே சமயம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டாலும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய படங்கள் வெளியாகும் நாட்களில் மட்டுமே தியேட்டரில் கூட்டம் கூடும், மற்ற நாட்களில் 20 அல்லது 30 பேர் மட்டுமே படம் பார்க்க வருவார்கள். இதனால் தியேட்டருக்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை, கைகாசு போட்டு படத்தை ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தியேட்டரை மூடும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து சென்னைவாசிகள் மீள்வதற்குள், தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள அகஸ்தியா தியேட்டர் நாளை முதல் மூடப்படுகிறது.

 

 

இதையும் படிங்க: நயன்தாரா, அமலா பால், கீர்த்தி சுரேஷ்... கேரள புடவையில் கெத்து காட்டும் டாப் ஹீரோயின்ஸ் புகைப்படங்கள்...!

1967ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த 1004 இருக்கைகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேஷன், ரஜினி, கமல் ஹாசனில் ஆரம்பித்து சூர்யாவின் காக்கா காக்க படம் வரை பல படங்கள் இங்கு வெள்ளி விழா கண்டுள்ளன. குளிர்சாதன வசதி இல்லாத இந்த தியேட்டரை யாரும் விரும்புவதில்லை என்பதாலும், கொரோனா காலத்தில் தியேட்டர்களை திறப்பதற்கான சாத்தியம் தெரியவில்லை என்பதாலும் நாளை முதல் இந்த தியேட்டர் நிறுந்தரமாக மூடப்படுகிறது.