Asianet News TamilAsianet News Tamil

தியேட்டர் பார்க்கிங் கட்டண கொள்ளைக்கு முடிவு கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவு...


பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் திரையரங்குகளில் அடிக்கப்படும் கொள்ளையை உடனே முடிவுக்குக் கொண்டுவர அரசு முயல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court warns against theatre parking charges
Author
Chennai, First Published Jan 30, 2019, 4:17 PM IST


பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் திரையரங்குகளில் அடிக்கப்படும் கொள்ளையை உடனே முடிவுக்குக் கொண்டுவர அரசு முயல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.chennai high court warns against theatre parking charges

சென்னை போன்ற பெரு நகரங்களில் தியேட்டர் பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் பத்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பொது மக்களிடம் கொள்ளை அடிக்கின்றனர். இதில் சில மால் தியேட்டர்களில் மணிக்கு ரூ 30 வீதம் ஒரு படம் பார்த்தால் குறைந்த பட்சம் 120 ரூபாய் வரை பிடுங்கிவிடுகின்றனர். 90 சதவிகித தியேட்டர்களில் குடிநீர் கூட எடுத்துச்செல்ல அனுமதியில்லை.

இது தொடர்பாக சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் உரிய வாகன கட்டணம் வசூலிப்பது இல்லை. அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றனர்.chennai high court warns against theatre parking charges

திரையரங்குகளில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். இது திரையரங்கு ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது. திரையரங்குகளில் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. உள்ளே விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. குடிநீர் கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் திரையரங்குகளில் உள்ள வாகன பார்க்கிங் கட்டணம் தொடர்பாக அரசு என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ, அந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios