Asianet News TamilAsianet News Tamil

#BREAKING “மாஸ்டர்” பட வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

அதில் சட்டவிரோதமாக இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.


 
 

chennai High court order to do not release Master Movie on pirate sites
Author
Chennai, First Published Jan 8, 2021, 12:25 PM IST

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

chennai High court order to do not release Master Movie on pirate sites

இந்நிலையில் இந்தப் படத்தை தயாரித்துள்ள  சவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் (seven screen studio) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் சட்டவிரோதமாக இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

chennai High court order to do not release Master Movie on pirate sites

 

இதையும் படிங்க: லைட்டா தெரியும் இடை... காற்றில் பறக்கும் உடை... அழகு தேவதையாய் ஜொலிக்கும் ப்ரியா பவானி ஷங்கர்...!

மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம் சட்டவிரோதமான இணையதளங்களில் மாஸ்டர் படத்தை வெளியிட்டால் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும், எனவே இந்த படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட கூடாது எனவும் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன் 400 சட்டவிரோத இணையதளங்களில், 9 கேபிள் டி.வி.களிலும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து 29 இணைய தள  சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios