தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி என இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதி மன்றம், ஜூன் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள்  தொடங்கப்பட்டன. எனினும் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீக்க கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தலை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறப்பு அதிகாரிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.