உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு ஆதரவாக பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த பாடகி சின்மயிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

வைரமுத்து மீது ‘மி டு’ விவகாரத்தில் குற்றம் சாட்டிய பிறகு மீடியாவுக்கு வி.ஐ.பி.யாக இருந்த சின்மயி தற்போது வி.வி.ஐ.பி.யாக மாறிவிட்டார். அந்த அந்தஸ்துக்கு ஏற்றபடி தனது ட்விட்டர் பக்கத்தில் பொள்ளாச்சி விவகாரம் உட்பட பாலியல் குற்றங்கள் எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக வலைதளப் போராளியாக மாறியிருக்கும் அவர், உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் விவகாரத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அனுப்பியிருந்தார்.

சின்மயியின் இந்த ஓவர் அக்கறை அவரது ஃபாலோயர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ‘சொந்தப் பிரச்சினைக்கோ பொள்ளாச்சி விவகாரத்துக்கோ கூட தெருவில் இறங்கிப் போராட உனக்கு டெல்லி நீதிபதி விவகாட்ரத்துல எதுக்கும்மா அவ்வளவு அக்கறை?  என்று பலரும் அவரை விமர்சித்தனர். அந்த விமர்சங்களை வழக்கம்போல் ‘சராசரி ஆணாதிக்கவாதிகளின் மனநிலை’ என்று விமர்சித்திருந்தார் சின்மயி.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் கமிஷனர் அலுவலகத்தில் சின்மயி அனுமதி கேட்டு அனுப்பியிருந்த  வள்ளுவர்கோட்ட போராட்டத்துக்கு அனுமதி மறுப்புக் கடித்தத்தை கமிஷனர் அலுவலகம் நேற்று அவருக்கு அனுப்பி வைத்தது. அதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சின்மயி...நாட்டின் உச்ச அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெரிய மனிதருக்கு எதிராக போராட அனுமதி கேட்டால் பொதுநலனுக்கு எதிரானது என்று ரிஜக்ட் பண்ணுகிறார்கள் ம்ஹ்ம்’ என்று ட்வீட்டியிருக்கிறார்.