Asianet News TamilAsianet News Tamil

’என்னப்பா இது மத்திய சென்னைக்கு வந்த சோதனை...பா.ம.க.வுக்கு சினிமா நடிகர்தான் வேட்பாளரா கிடைச்சாரா?...

மத்திய சென்னையில் பா.ம.க.நிறுத்தியிருக்கும் வேட்பாளர் சாம் பால் ‘வனமகன்’ அஜீத்தின் ‘பில்லா 2’ உட்பட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர். தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சிப்பவர். அவருக்கு என்ன அடிப்படையில் சீட் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி வலைதளங்களில் எழுந்துவரும் நிலையில் அக்கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

chennai central pmk candidate is an actor
Author
Chennai, First Published Mar 22, 2019, 10:47 AM IST

மத்திய சென்னையில் பா.ம.க.நிறுத்தியிருக்கும் வேட்பாளர் சாம் பால் ‘வனமகன்’ அஜீத்தின் ‘பில்லா 2’ உட்பட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர். தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சிப்பவர். அவருக்கு என்ன அடிப்படையில் சீட் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி வலைதளங்களில் எழுந்துவரும் நிலையில் அக்கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.chennai central pmk candidate is an actor

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் சரவணன் என்பவர் எழுதியுள்ள பதிவில்,...என்னப்பா இது நமக்கு வந்த சோதனை..

இந்த அண்ணன்... டாக்டர் சாம் பால்.. தயாரிப்பாளர், கம் நடிகர். ஜிம் வைத்திருக்கிறார். கூடவே சென்னை முழுவதும் சலூன் கடைகள், பேஷன் கடைகளும் நடத்துகிறார்.பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் இரவு நேர வாழ்க்கையை வாழும் சென்னைவாழ் ஹை சொஸைட்டி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். காசுக்குப் பஞ்சமே இல்லை..

இப்போது திடீரென்று இந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கிறாராம். அதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறாராம்..!இவர் எப்போ இந்தக் கட்சில சேர்ந்தார்..? எத்தனை போராட்டத்துல கலந்துக்கிட்டாரு..? கட்சிக்காக ஜெயிலுக்குப் போனாரா..? இல்லையா..? ஏதாவது ஆர்ப்பாட்டத்துலயாவது கலந்து கோஷம் போட்டிருக்காரான்னு தெரியலை.. இனிமேல்தான் விசாரிக்கணும்..!எனக்கும் நன்கு தெரிந்தவர்தான். இப்போ இவருக்கு 'ஜெயிக்கணும்'னு வாழ்த்துச் சொல்றதா..? வேண்டாமா..? ஒரே கன்பியூஸிங்கா இருக்கு..!!! என்று பதிவிட்டிருக்கிறார்.chennai central pmk candidate is an actor 

இவருக்கும் இதுபோன்ற அனைத்துக்கேள்விகளுக்கும் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்த சாம் பால்,’ 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது மக்களோடு மக்களாக நின்று என்னால் இயன்ற உதவிகளை செய்தேன். இதன் மூலம் மட்டற்ற மகிழ்ச்சியும், மன நிறைவும் பெற்றேன். இந்த நிகழ்வே மக்கள் சேவையில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள ஊந்து சக்தியாய் அமைந்தது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், மத்திய சென்னையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டி இட இதனாலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது’ என்று பதிலளித்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios