chennai box office top movie
இந்த வாரம் குடியரசு தின ஸ்பெஷலாக நடிகர் உதயநிதி நடித்த நிமிர்,
அனுஷ்கா நடித்த பாகமதி, மற்றும் பல்வேறு சர்ச்சைகளையடுத்து நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள 'பத்மாவத்' ஆகிய படங்கள் வெளியானது.
இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது எனினும், பல சர்ச்சைகள், கலவரங்கள், போராட்டங்களை தாண்டி வெளியான 'பத்மாவதி' திரைப்படத்திற்கு அனைவர் மத்தியிலும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
தற்போது இந்த மூன்று படங்களின் சென்னை வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
நிமிர் திரைப்படம் - ரூ. 24 லட்சம்
பாகமதி திரைப்படம் - ரூ. 37 லட்சம்
பாலிவுட் படமான பத்மாவத் திரைப்படம் ரூ. 52 லட்சம்
தொடர்ந்து சனி, ஞாயிறு என விடுமுறை நாட்கள் என்பதால், அனைத்து திரைப்படங்களும் நல்ல வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
