ஒரு உண்மையான வெற்றிப்படம் கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டதே என்று நினைத்து ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இயக்குநர் மணிரத்னம் கொடுத்த சமீபத்திய பார்ட்டிதான் இண்டஸ்ட்ரியின் லேட்டஸ்ட் டாக்.

ஆச்சர்யமாய் சமீபத்திய சில தமிழ்ப்படங்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களாய் அமைந்து வருகின்றன. அதைவிடவும் ஆச்சரியமாய் சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் ‘செ.சி.வானமும். ஒரு சில விமர்சகர்களின் தாக்குதலையும் தாண்டி வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.

அடுத்து இதுபோன்ற ஒரு ஒரிஜினல் வெற்றி வாய்ப்பு அமைய எவ்வளவு காலம் ஆகுமோ என்று யோசித்தாரோ என்னவோ, உற்சாகமிகுதியில் உடனே ஒரு தடபுடல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டார் மணி.

டீம் கேப்டனே ஓவர் உற்சாகத்தில் இருக்கும்போது மற்றவர்களுக்கு சொல்லவா வேண்டும்.முக்கியமாக படத்தின் நாயகிகள், மம்மி நடிக ஜெயசுதா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸின் பெண் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்ட அந்த பார்ட்டியில் சோமபானத்தை அதிகமாக அருந்திய செ.சி.வானம் குழுவினர், நட்சத்திர ஹோட்டலையும் சர்வீஸ் செய்த ஊழியர்களையும் படாதபாடு படுத்துவிட்டார்களாம்.

அதிகாலையில் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டவுடன் ‘இனிமே மணிரத்னம் படம் சக்சஸ் பார்ட்டி குடுக்கிற அளவுக்கு ஓடக்கூடாது ஆண்டவா’ என்று ஹோட்டல் நிர்வாகம் ஒரு ஹோமம் வளர்த்ததாக ஊழியர் வட்டாரத்தகவல்.