Chef Venkatesh Bhat : இன்று சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் கலைஞர் இருக்கிறார் என்றால் அது நிச்சயம் வெங்கடேஷ் பட்டாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு நபராக அவர் மாறியிருக்கிறார்.

பூர்வீகம் தமிழகம் இல்லை என்றாலும், சென்னையில் பிறந்து வளர்ந்து இங்கேயே கல்வி கற்று மிகப் பெரிய உணவகங்களில் கைதேர்ந்த சமையல் வல்லுனராக கடந்த பல ஆண்டுகளாக வெற்றி நடை போடும் ஒருவர் தான் வெங்கடேஷ் பட். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகளுக்கு பர்சனல் செப்பாகவும் இவர் பணியாற்றி வந்திருக்கிறார். 

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக துவங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைக்காட்சி உலகில் அறிமுகமானார் வெங்கடேஷ் பட். அன்று தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியின் ஸ்டார் நடிகராக மாறினார் வெங்கடேஷ் பட் என்றால் அது மிகையல்ல. 

Shivani Narayanan : ரோஜாவை ஏந்தி நிற்கும் கவர்ச்சி பூ.. அனலை கூட்டும் போஸில் ஷிவானி நாராயணன் - ஹாட் பிக்ஸ்!

தனது தனித்துவமான ஜட்ஜ் செய்யும் முறையால் பிரபலமான இவரை பட்டு குட்டி என்று தான் ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். ஸ்ட்ரிக்டான நடுவர் என்றாலும் சட்டென்று எமோஷனல் ஆகிவிடும் நபராகவும் இருக்கின்றார் பட். இவரோடு இணைந்து கின்னஸ் சாதனை படைத்த அய்யா செஃப் தாமு அவர்களுக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கினார்.

இன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் ஒரு மில்லியன் பேர் அவரை பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஒரு குக்கிங் நிகழ்ச்சியில் நடுவராக அவர் பயணித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் பணிபுடர்ந்த மலைகளில் தனது மனைவியோடு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஒரு வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். 

View post on Instagram

மேலும் "எவ்வளவு சண்டை போட்டாலும், பொண்டாட்டி அடிச்சாலும் அதையெல்லாம் தாங்கி சிரிக்கின்றவன் தான் நல்ல புருஷன்" என்று கணவன்மார்களுக்கு ஒரு அட்வைஸ் ஒன்றையும் கொடுத்திருக்கிறார் வெங்கடேஷ் பட்.

இனி சீரியல் செட் ஆகாது.! கணவரோடு சேர்ந்து சட்டு புட்டுன்னு.. புது பிஸ்னஸில் இறங்கிய பிரியங்கா நல்காரி.!