பாலிவுட்டில் 90ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் 2009ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். சத்யுக் கோல்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் இருந்து வந்தனர். 

இதையும் படிங்க: ரஜினி கிட்ட காசு வாங்கிட்டியா?... சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

அப்போது 2014ம் ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியரான சச்சின் ஜோஷி என்ற தொழிலபதிபர் அந்த நிறுவனத்தில் 5 திட்டம் ஒன்றில் தங்கம் வாங்குவதற்காக முதலீடு செய்துள்ளார். சுமார் 18 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் இணைந்த 5 ஆண்டு திட்டத்தின் படி அவருக்கு இறுதியில் தள்ளுபடி விலையில் குறிப்பிட்ட அளவு தங்கத்தை கொடுப்பதாக ஷில்பா ஷெட்டியின் நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. 

இதையும் படிங்க: "நான் எப்ப சிக்குவேன்னு பார்த்துக்கிட்டே இருக்கு"... விழா மேடையில் பிரபல பாடகியை கலாய்த்த ராதாரவி...!

எனவே அதை வாங்குவதற்காக மும்பை வந்த அவர், அந்த நிறுவனம் மூடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரித்ததில் ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரும் சில ஆண்டுகளுக்கு முன்பே ராஜினாமா செய்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சச்சின் ஜோஷி இதுகுறித்து போலீசில் மோசடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.