மார்கெட்டே இல்லாத நடிகைகள் கூட கேரவன் கேட்டு மல்லுக்கட்டும் இக்காலத்தில் படத்தின் பாடல்காட்சிக்காக பப்ளிக் டாய்லெட்டிகூட காஷ்டியூம் மாற்றிக்கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று நடிகை சிருஷ்டி டாங்கேயை வானளாவப் புகழ்கிறார் ‘சத்ரு’ படத்தின் இயக்குநர் நவீன் நஞ்சுண்டன்.

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ’சத்ரு’.இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.    

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய இயக்குநர்,’இந்த படத்தில் கதிர் கேரக்டர்தான் போலீஸ். ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம். தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை கதிர்  24 மணி நேரத்தில் எப்படி  தேடி பிடித்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. படம் முதலில் முதலிலிருந்து இறுதிவரை விறுவிறுவென இருக்கும்.

இப்படத்திற்கு நாயகி சிருஷ்டி டாங்கே கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது. லைவ் லொகேஷன்களுக்காக நடிகர், நடிகைகளை அவ்வளவு டார்ச்சர் பண்ணியிருக்கோம். ஒரு பாடல் காட்சிக்காக அவங்க  20 காஷ்ட்யூம்ஸ் மாத்தவேண்டியிருந்தது. கேரவன் கொடுத்தாலே ஒரு நாளைக்கு 10 காஷ்ட்யூம் மாத்துறதே கஷ்டம். ஆனா அவங்க பாண்டிச்சேரி பீச்சுல பப்ளிக் டாய்லெட்டுக்குள்ள போய்கூட காஷ்ட்யூம் மாத்திக்கிட்டு வந்து நடிச்சுக்கொடுத்தாங்க. அந்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது’ என்றார் நவீன் நஞ்சுண்டன்.