Asianet News Tamil

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்க உள்ளது இவரா? கடுப்பான ரசிகர்கள்!

சந்திரமுகி 2 படத்தில், மிகப்பெரிய எதிர்பாப்பு மிக்க ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

chandramuki 2 movie bollywood actress acting in jyothika character?
Author
Chennai, First Published Jul 27, 2020, 4:50 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சந்திரமுகி 2 படத்தில், மிகப்பெரிய எதிர்பாப்பு மிக்க ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணிசித்ரத்தாலு. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான ஃபாசில் இயக்கத்தில் மோகன் லால், ஷோபானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் பி.வாசு.

மேலும் செய்திகள்: விஷாலும், அவருடைய 82 வயது தந்தையும் ஒரே வாரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டது எப்படி? அவரே வெளியிட்ட தகவல்!
 

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சூப்பர் ஸ்டாரின் அசத்தலான ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு இரண்டும் சேர்ந்து படத்தை கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஓடவைத்தது. 

ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சந்திரமுகி கதை இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்று வேட்டையன் ராஜா, மற்றொரு கதாபாத்திரம் ஜோதிகா ஏற்று நடித்த சந்திரமுகி. இந்நிலையில் "ரா ரா" பாடலில் மட்டுமே காட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்களை  இரண்டாம் பாகம் முழுவதும் காட்டப்போகிறார்களாம். 

மேலும் செய்திகள்: அடையாளமே தெரியல... பள்ளி சீருடையில் தோழிகளுடன் சாய் பல்லவி எடுத்து கொண்ட புகைப்படம்!
 

அதாவது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் முழுக்க வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலை நடிகை ஜோதிகா மறுத்தார்.

மேலும் செய்திகள்: அநியாயத்திற்கு உடல் இளைத்தாலும்... உடையால் கவர் செய்யும் ஹன்சிகா..! ஆரஞ்சு நிற உடையில் அள்ளுது அழகு!
 

எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளவர் யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்த நிலையில், தற்போது இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியார அத்வானி ஜோதிகா நடிக்க உள்ள கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகார பூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்:மாடுகளுக்கு பதிலாக பெற்ற மகள்களை பூட்டி ஏர் உழுத விவசாயி..! நடிகர் சோனு சூட் செய்த மிகப்பெரிய உதவி!
 

கவர்ச்சிக்கு செம்ம பிட்டாக இருக்கும் கியாரா இந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆவாரா? என இந்த தகவலுக்கே செம்ம கடுப்பாகி விட்டனர் ரசிகர்கள். கதையில் அதிகப்படியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Follow Us:
Download App:
  • android
  • ios