நடிகர் விஷால், அவருடைய தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் மேலாளர் ஆகியோர் அடுத்தடுத்து சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து மீண்டது எப்படி என வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார் விஷால்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, முதலில் தன்னுடைய தந்தை ஜி.கே.ரெட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரை நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டிலேயே தனிமை படுத்தினோம். இதற்காக மருத்துவர்களை அவமதித்தேன் என்பது அர்த்தம் அல்ல என்பதையும், விஷால் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தந்தையே உடன் இருந்து, அவரை கவனித்து கொண்டதால்,   தனக்கும் அன்று இரவே கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. எனவே தன்னுடைய தந்தைக்கு கொடுத்த மருந்துகளை நானும் உட்கொண்டேன், என்னை தொடர்ந்து என்னுடைய மனேஜருக்கும் காச்சல் மற்றும் பின் சலி பிரச்சனை ஏற்பட்டது. அவரும் டெஸ்ட் செய்து பார்த்ததில் கொரோனா உறுதியானது என தெரிவித்துள்ளார்.

ஹோமியோபதி, மற்றும் சித்த மருந்துகளால் ஒரு வாரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைத்ததாக விஷால் தெரிவித்துள்ளது உண்மையில் அனைவரையுமே ஆச்சர்யடுத்தியுள்ள்ளது. மருந்து மாத்திரைகளை விட கொரோனாவில் இருந்து மீள முக்கியமானது பய உணர்வு வரக்கூடாது என்பதையும், தைரியமாக இருக்க வேண்டும் என விஷால் கூறியுள்ளார்.

விஷால் வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்க: முக்கியமான மருந்து இதுதான்.. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த விஷால் உறுதி..! வீடியோ