திருவாரூர் வாஞ்சிநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த கையோடு பக்தர்களுடன் அன்னதானம் சாப்பிட்ட ராகவா லாரன்ஸ்
திருவாரூர் வாஞ்சிநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சந்திரமுகி 2 நாயகன் ராகவா லாரன்ஸ், பக்தர்களுடன் அன்னதானம் சாப்பிட்டார்.
திருவாரூர் மாவட்டம் வட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி மங்களாம்பிகா சமேத திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எமதர்ம ராஜா சுவாமிக்கும் அதேபோன்று சந்திரகுப்தர் சுவாமிக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது என்பது சிறப்புடையதாக உள்ளது.
நேற்று சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியான நிலையில் பிரபல திரைப்பட நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் திருவாரூர் பகுதியில் அமைந்துள்ள வாஞ்சிநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமுடன் சென்று லாரன்சுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அப்படம் முதல் நாளிலேயே ரூ.7.5 கோடி வசூலையும் வாரிக்குவித்துள்ளது. சந்திரமுகி 2 படத்துக்கு கிடைத்த வரவேற்பால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். அப்படம் மேலும் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஆக வேண்டி ராகவா லாரன்ஸ் திருவாரூர் வாஞ்சிநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படியுங்கள்... பழைய கதையை பட்டி டிங்கரிங் பார்த்து எடுக்கப்பட்ட ‘சந்திரமுகி 2’ படத்துக்கு முதல் நாளே இத்தனை கோடி கலெக்ஷனா?