தமிழ் திரையுலகில், தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர் சந்திரபாபு.

அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் காலடியெடுத்து வைத்த சந்திரபாபு , விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950களில் முன்னணி நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

மேலும் 'சபாஷ் மீனா' என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடதில் நடித்த இவருக்கு, ஒரு வேடத்தில் சரோஜாதேவி ஜோடியாக நடித்திருந்தார். 

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சிவாஜி கணேசனும் அவருக்கு ஜோடியாக மாலினியும் நடித்திருந்தனர். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் சிவாஜியையே மிஞ்சும் அளவிற்கு நடித்ததால் அனைவரது பாராட்டையும் பெற்றார்.

மேலும் சென்னை வாசிகளால் பேசப்படும் வித்தியாசமான தமிழை 1959 தில் வெளியான சகோதரி திரைபடத்தின் மூலம் சினிமாவிற்குள் எடுத்து வந்த பெருமையும் சந்திரபாபுவையே சேரும்.

இந்த திரைப்படத்திற்காக அந்த காலத்திலேயே ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் காமெடியன் இவர் தான். அதே போல இவரது நடனத்திற்கும் இன்று வரை பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.