இதையடுத்து தமிழக அரசு 50 சதவீத ஆக்குபன்ஸிக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பை வெளியிட்டது.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பரவல் காரணமான இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இடையில் பல்வேறு தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தியேட்டர்களுக்கு மட்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 10-ம் தேதியிலிருந்து திரையரங்குகள் திறக்கப்படவும், 50% பார்வையாளர்களுடன் இயங்கவும் தமிழக அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஜனவரி 31-ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு தெரிவித்தது. அதே சமயத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் வெளியவதை முன்னிட்டு தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து கடந்த 4ம் தேதி தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதற்கு பொதுமக்கள், திரையுலகினர், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் மத்திய அரசும் நோய் தொற்றுக்கு எளிதில் வழிவகுக்கும் என்பதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும், கல்வி நிலையங்கள் திறக்கப்பட அனுமதிக்காத நிலையில் திரையரங்குகளில் மட்டும் 100 சதவீத அனுமதி என்பது நல்லதல்ல எனவும், 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்கள் செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு 50 சதவீத ஆக்குபன்ஸிக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பை வெளியிட்டது.
தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் உடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கென புதிய நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 27, 2021, 7:46 PM IST