சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நயன்தாராவுடன் ஜோடி போட்டு நடித்து முடித்துள்ள திரைப்படம் 'தர்பார்' இந்த படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ரிலீஸ் பணிகள் மற்றும், பிரமோஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இந்த படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக, தணிகை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த அதிகாரிகள், வன்முறை காட்சிகள் அதிகமாகவே இருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்க உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ள இந்த படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மிக பிரமாண்டமாக இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அமெரிக்காவில் இந்த படத்தின் பிரீமியர் ஷோ வெளியிடமும் படக்குழு ஏற்பாடு செய்துள்ளனர் படக்குழுவினர்.