Censor board certification certificate for neelam Tamils The director is ...

இயக்குநர் வெங்கடேஷ் குமாரின் ஐந்து வருட உழைப்பில் எடுக்கப்பட்ட ஈழத் தமிழர்களை பற்றிய ‘நீலம்’ படத்திற்கு தணிக்கை குழுச் சான்றிதழ் தர மறுத்துவிட்டது.

‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’, ‘பியூட்டிபுல் ஐ’ போன்ற படங்களை இயக்கியவர் வெங்கடேஷ் குமார்.

இவர் தற்போது இயக்கியுள்ள புதிய படம் ‘நீலம்’.

இந்தப் படத்தை புளூவேவ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அவரே சொந்தமாக தயாரித்து உள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரீ, பவித்ரா, ஜெகன், விஜய்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சதீஷ் சக்ரவர்த்தி இசையமைத்து உள்ளார்.

இப்படம் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு படத்தின் டிரைலரை தணிக்கை அதிகாரிகள் பார்த்தனர்.

பின்பு டிரைலரில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் உள்ளது. வன்முறை அதிகமாக உள்ளது. என்று கூறி தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்துவிட்டது.

இதுகுறித்து இயக்குனரும், தயரிப்பாளருமான வெங்கடேஷ்குமார், “நீலம் திரைப்படம் ஈழ தமிழர்களை பற்றி உள்ளதால் மற்றும் போராளிகளின் வாழக்கையை தழுவி எடுக்கப் பட்டதால் இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்து விட்டனர்.

இத்திரைப்படம் எனது ஐந்து வருட உழைப்பு, இந்த முடிவு என்னை மிகவும் பாதித்துள்ளது. இது தமிழருக்காக எடுக்கப்பட்ட படம். எனக்கு நீதி வேண்டும்” என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.